Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

எங்கும் பசுமை; எதிலும் பசுமை… பசுமை வாக்குச்சாவடிகள்..!

green polling stations tamil nadu chennai

இன்று (ஏப்ரல் 23, 2026) தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 234 தொகுதிகளில் 5.67 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குச் சாவடிகளுக்குச் செல்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் மற்றும்  திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜவ்வாது மலைப் பகுதியில் அமைந்துள்ள புதுர்நாடு கிராமம், இந்த தேர்தலில் ஒரு சிறப்பான முன்னுதாரணமாக மாறியுள்ளன.

Thank you for reading this post, don't forget to subscribe!

பசுமை பாடம்

வருங்காலங்களில் பசுமை வாக்குச்சாவடிகள்  அதிக அளவில் மாநிலம் முழுவதும் அமைக்க வேண்டும். குறிப்பாக பெரு நகரங்களிலும் பசுமை வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள்.

Green Polling Station
பசுமை வாக்குச்சாவடி; ஜவ்வாது மலை

புதுர்நாடு கிராமம் பசுமை வாக்குச்சாவடி, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் காத்திருக்க நிழல் ஏற்படுத்த, தென்னை மற்றும் மூங்கில் ஓலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், மண் பானைகளில் குடிநீர் வைக்கப்பட்டதுடன், எஃகு கோப்பைகள் பயன்படுத்தப்பட்டன. குப்பை மேலாண்மைக்காக, பிளாஸ்டிக் தொட்டிகளுக்குப் பதிலாக மூங்கில் கூடைகள் அமைக்கப்பட்டன.

சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சமவெளியிலிருந்து பிரிந்துள்ள இந்தப் புதுர்நாடு கிராமப் பஞ்சாயத்தில், 900க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தை பசுமை வாக்குச்சாவடிக்காகத் தேர்ந்தெடுத்தது மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கே. சிவசௌந்தரவல்லி.

பசுமை முயற்சி!

இந்த முயற்சி, வனத்துறையுடன் இணைந்து பஞ்சாயத்து இயக்குநரகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, மலைப்பகுதியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள ஒரே மாவட்டம் திருப்பத்தூர் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்குப் பிறகு, மலைப்பகுதியில் சட்டமன்றத் தேர்தலுக்காக இவ்வாறு பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் இதன் முக்கியத்துவத்தை உயர்த்துகிறது.

மேலும், இந்த நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 21 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள நிலையில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முயற்சியின் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பெறுகின்றனர்.

பசுமை வாக்குச்சாவடியின் சிறப்பு என்னவென்றால், அதன் கட்டுமானப் பொருட்கள் பெரும்பாலும் ஜவ்வாது மலைக் காடுகளில் இருந்து பெறப்பட்டவை. குச்சிகள், இலைகள் போன்ற இயற்கை வளங்களை பயன்படுத்தி முழு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. கையால் எழுதப்பட்ட துணி பதாகைகள் மூலம் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வருங்காலங்களில் பசுமை வாக்குச்சாவடிகள்  அதிக அளவில் மாநிலம் முழுவதும் அமைக்க வேண்டும். குறிப்பாக பெரு நகரங்களிலும் பசுமை வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த முயற்சி, தேர்தல் என்பது ஒரு ஜனநாயக கடமையாக மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் உருவாக்கும் ஒரு வாய்ப்பாக மாறக்கூடும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

ஏன் இது முக்கியம்? — ஒரு தேர்தலின் சுற்றுச்சூழல் தாக்கம்

தமிழ்நாட்டில் மட்டும் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சாவடியிலும் flex boards, பிளாஸ்டிக் பேனர்கள், thermocol அலங்காரங்கள் பயன்படுத்தப்பட்டால் — கற்பனை செய்துபாருங்கள், எவ்வளவு கழிவு உருவாகும்!

  • பிளாஸ்டிக் பானர்கள் மற்றும் flex — மட்காதவை, நூறு ஆண்டுகளுக்கும் மேல் நிலத்தில் தங்கும்
  • ஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்கள், தட்டுகள் — நீரோடைகளை அடைக்கின்றன
  • ரசாயன சாயம் பூசிய பொருட்கள் — மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகின்றன

பசுமை வாக்குச் சாவடி இந்த சிக்கல்களுக்கு நேரடியான தீர்வு. ஒரு வாக்குச் சாவடி பசுமையாகும்போது, அது ஒரு சாதாரண கட்டிடம் மட்டுமல்ல — அது ஒரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மேடை!

பசுமை வாக்குச்சாவடி;திருவள்ளூர் மாவட்டம்

ஒரு வாக்கு, ஒரு மரம்!

நாம் இன்று வாக்களிக்கும்போது, வரும் தலைமுறைக்காகவும் வாக்களிக்கிறோம். QR Code வாக்காளர் சீட்டிலிருந்து பசுமை சாவடி வரை — இந்த தேர்தல் தொழில்நுட்பத்தையும் இயற்கையையும் ஒரே நேரத்தில் கொண்டாடுகிறது.

ஒரு தேர்தல் மட்டுமே ஒரு ஆட்சியை தீர்மானிக்கிறது — ஆனால் நாம் பாதுகாக்கும் ஒவ்வொரு மரமும், குறைக்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக்கும் வரும் நூறு ஆண்டுகளை தீர்மானிக்கும். பசுமை வாக்குச் சாவடி ஒரு தொடக்கம் மட்டுமே. நாம்தான் அந்த இயக்கத்தை முன்னேற்ற வேண்டும்.

மண்ணுக்கும் மக்களுக்கும் — தமிழ் நே(ச்)சர் 🌿

இதையும் படியுங்கள்:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube