தமிழ்நாட்டின் அடையாளமாகப் புகழ்பெற்ற பண்ருட்டி பலா, இம்முறை தன் நான்காம் ஆண்டு திருவிழாவை கொண்டாட தயாராகிவிட்டது. இயற்கை வேளாண்மையை நேசிப்பவர்களுக்கும், நாட்டு ரக பழங்களை விரும்புவோருக்கும் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு.Thank you for reading this post, don’t forget to subscribe!
Thank you for reading this post, don't forget to subscribe!எப்போது? எங்கே?
நாள்: 10 மே 2026, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல்
இடம்: சி. தனபால் திருமண மண்டபம், சாத்திப்பட்டு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம்
ஒருங்கிணைப்பு: பண்ருட்டி பலா மேம்பாட்டுக் குழு — தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம்
தொடர்புக்கு: 88708 90109 / 8668 154871
“நாலோடையும் நான்காயிரம் பலாவும்”
ஒரு தாய் மரத்தின் ஆயிரம் பிள்ளைகள் ஒரே இடத்தில் — இதுதான் இந்த திருவிழாவின் உயிர். “பலாக்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு இரகம்” என்னும் தத்துவத்தை உயிரோட்டமாக உணர வைக்கும் இந்த திருவிழா, பலாவின் பன்மையையும் பெருமையையும் கொண்டாடுகிறது.
நிகழ்வின் நோக்கங்கள்
விதைக் கன்றுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது, சிறப்பான நாட்டு இரகங்களை அடையாளம் காண்பது, ஏன் நாட்டு பலா வேண்டும் என்னும் அனுபவ பகிர்வு — இவை மட்டுமல்ல, நாட்டு இரக பலா மரங்கள் மற்றும் விளைச்சல் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த விழிப்புணர்வும் இந்த திருவிழாவின் மையக் கருவாக உள்ளது.
சிறப்பு நிகழ்வுகள்
தலைமை: திரு. இரா. ஜெயராமன் அவர்கள் இடையர்குப்பம்
பலா சாகுபடி, பூச்சி மேலான்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த சிறப்பு உரைகள்:
முனைவர் திரு. இர.செந்தில்குமார் — முதன்மை விஞ்ஞானி, இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் (IIHR), பெங்களூர்
முனைவர் திருமதி. கு.காயத்ரி — உதவிப் பேராசிரியர், காய்கறி ஆராய்ச்சி நிலையம் பாலூர்; பலாவில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலான்மை நிபுணர்
திரு. பாரி. மணிமொழி — பலா மதிப்புக் கூட்டுதல் நிபுணர், திருமுதுகுன்றம்
திரு. மோகன் — அதிகை பலா மதிப்புக் கூட்டுதல் நிபுணர், பண்ருட்டி
திரு. ஆயிரம் காய்ச்சி ராமசாமி — மாளிகம்பட்டு; 200 ஆண்டு பல மரத்தின் சிறப்பு உரை, பண்ருட்டி பலாவிற்கு புவிசார் குறியீடு பெற்றவர்
திரு. ஜெ.மணிகண்டன் — நாட்டு பலாவின் சிறப்பு, விளைந்த பலாவை கண்டறிதல், பலா நடவு தொழில்நுட்பம், பலாவில் இனிப்பை கூட்டும் தொழில்நுட்பம்
சுந்தரம் பலாவின் சிறப்புகள்

சுந்தரம் குடும்பத்தினர் கொடிகோணங்குப்பம் சார்பில் சிறப்பு அனுபவப் பகிர்வு:
திரு. ஜெ.இராமச்சந்திரன் — ஜெயராமன் பலாவின் சிறப்புகள்
திரு. திருமலை — பலாவில் மிளகு சாகுபடி அனுபவம், திருமலை பலாவின் சிறப்பு
திரு. சந்திரசேகர் — பலா மதிப்புக் கூட்டுதல்
சித்தர். திருத்தணிகாசலம் — சென்னை; நலம் கூட்டும் பலா, நோய் தடுக்கும் பலா
திரு. தெ.சிவக்குமார் — கோட்டேரி; பலா மதிப்புக் கூட்டுதல் அனுபவ உரை

அரசின் திட்டங்கள் மற்றும் வழிகாட்டல்
திருமதி. சு.பூங்கோதை — வேளாண்மை துணை இயக்குநர், கடலூர் மாவட்ட பலா மதிப்புக் கூட்டு மையத்தின் செயல்பாடுகள்
திரு. க.நடராஜன் — பேராசிரியர், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், விருத்தாசலம்
திரு. செல.அருண் — தோட்டக்கலை துணை இயக்குநர், கடலூர்
திரு. சசிகுமார் — வட்டார வளர்ச்சி மேலாளர், நபார்டு, கடலூர்
திருவிழாவில் என்னென்ன கிடைக்கும்?
1 கிலோவிலிருந்து 60 கிலோ வரை உள்ள பலாக்கள் இடம்பெறும். அதிக சுவையுடைய மற்றும் அதிக எடையுடைய பலா உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். வீரட்டானேஸ்வரர் நாட்டு இரக பலாக் கன்றுகளும் வழங்கப்படும்.
திருவிழாவில் கிடைக்கும் பலா பொருட்கள்:
பலாச்சுளைச் சாறு, பலாகோட்டை அவியல், பலாச்சுளை பனிக்கூழ் (ஐஸ்கிரீம்), பலா பிஸ்கட், பலா வத்தல், பலாச்சுளை அல்வா, நாட்டு பலாக் கன்றுகள், பலா இசைகருவிகள், பலாச்சுளை, பலா பிரியாணி, பலா பஜ்ஜி, பலா சாக்லேட் என பலவகை பொருட்கள் கிடைக்கும்.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள், நாட்டுச் சர்க்கரை, மரசெக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள் — இவையும் கிடைக்கும்.
போட்டியும் பரிசும்!
அதிக சுவையுடைய பலா மற்றும் அதிக எடையுடைய பலாவின் உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசு பொருட்களுடன் கௌரவிக்கப்படுவார்கள். மரபு நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் மரபு மரங்களின் விதைகள் கண்காட்சியும் இடம்பெறும்.
ஏன் இந்த திருவிழா முக்கியம்?
”பண்ருட்டி பலா வெறும் பழமல்ல — அது கடலூர் மாவட்டத்தின் கலாச்சார அடையாளம், பல ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம். புவிசார் குறியீடு பெற்ற இந்த சிறப்பு இரகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதே இந்த திருவிழாவின் உயரிய நோக்கம்” என்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.
“ஆயிரம் காய்ச்சி ரகம் முதல் 60 கிலோ வரை… பண்ருட்டி பலா திருவிழாவில் அணிவகுப்பு!”க்கு ஒரு பதில்”
-
எங்கள் வீட்டிற்கு தேவைபடும் மிகுந்த சுவை உடைய குறைந்த எடைகொண்ட பலா வகை எது என்று குறிப்பிட வேண்டுகிறோம்.
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/














மறுமொழி இடவும்