Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

150 ஆண்டு பல்லாவரம் சந்தை; ஹைதர் காலத்து பொருள் முதல் ஆப்பிள் மேக்புக் வரை ! 

Pallavaram Sandhai

சென்னையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பல்லாவரம் வாரச்சந்தை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை கரண்ட் சவுத் சாலையோரம் இச்சந்தை இயங்குகிறது. இங்கு வெளியூர் வியாபாரிகளும், வெளிமாவட்ட மக்களும் கூட வருகிறார்கள். எனவேதான் இது சாமானிய மக்களின் “சூப்பர் மார்க்கெட்” என்று அன்போடு அழைக்கப்படுகிறது. ஹைதர் காலத்து பொருள் முதல் ஆப்பிள் மேக்புக் வரை இங்கு கிடைக்கின்றன.

Thank you for reading this post, don't forget to subscribe!

சாமானியனின் சூப்பர் மார்க்கெட்

இங்கு கிடைக்காத பொருளே இல்லை என்று சொல்லலாம். சமையல் பொருட்கள், காய்கறிகள், மின்னணு சாதனங்கள், பழம்பொருட்கள், சிலைகள் — அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கின்றன. எனவேதான் இது சாமானிய மக்களின் “சூப்பர் மார்க்கெட்” என்று அன்போடு அழைக்கப்படுகிறது.

குறிப்பாக, பழங்கால நாணயங்கள் இங்கு பரவலாகக் கிடைக்கின்றன. அந்தக் கடைகளை சுற்றி நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது, தமிழர்களிடையே நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பது புரிகிறது.

Pallavaram Sandhai
வண்ண மீன்களை ஆர்வமாக பார்க்கும் மக்கள்…

வளர்ப்பு பிராணிகள் முதல் வளர்ப்பு செடிகள் வரை

நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளும், அரிய வகை செடிகளும் இந்தச் சந்தையில் கிடைக்கின்றன. இதுவே பலரை இங்கு இழுக்கும் காந்தமாக விளங்குகிறது. வாரம்தோறும் சுமார் 50,000 பேர் இந்தச் சந்தைக்கு வருகை தருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

90-களின் சுவை தரும் மிட்டாய் கடை

இந்தச் சந்தையில் பலரும் தவறாமல் தேடிச் செல்லும் இடம் — ’90 கிட்ஸ் மிட்டாய் கடை’. 25-க்கும் மேற்பட்ட பழைய மிட்டாய்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இது ஒரு நினைவுகூரும் இடமாக மாறியிருக்கிறது.

ஏன் வெள்ளிக்கிழமை மட்டும்?

இதற்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.

Pallavaram Sandhai
வித,விதமான வாட்சுகள்

ஆற்காடு நவாப்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில், வெள்ளிக்கிழமை அவர்களுக்கு விருந்து தினமாக இருந்தது. அந்த நாளில் கால்நடைகளும் இறைச்சியும் அதிக அளவில் வாங்கப்பட்டன. இதனால் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெற தொடங்கியது; விற்பனையும் பொருளாதாரமும் துடிப்பு பெற்றன. அந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

முதலில் பல்லாவரத்தின் சண்டி தெருவில் கால்நடை சந்தையாக இருந்த இது, பின்னர் திரிசூலம் ரயில் நிலையம் அருகே பழைய ஜிஎஸ்டி சாலைக்கு இடம்பெயர்ந்தது. இன்று வாரம்தோறும் பல லட்ச ரூபாய் வர்த்தகம் நடைபெறும் இடமாக வளர்ந்து நிற்கிறது.

Pallavaram Sandhai
ஹைதர் காலத்து பொருள் முதல்… ஆப்பிள் மேக்புக் வரை…

பழமையும் புதுமையும் கலந்த பல்லாவரம் சந்தை — ஒருமுறை சென்று பாருங்கள், அந்த அனுபவம் நீங்கள் எதிர்பார்த்ததை விட நிறைய தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube