Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

இயற்கை பூச்சிக் கட்டுப்பாடு; இனி,பூச்சிக்கொல்லி கடைக்கு செல்ல வேண்டாம்!

CHES IIHR
‘பூச்சி பிரச்சனை வந்தால் நேரடியாக பூச்சிக்கொல்லி கடைக்கு செல்லாதீர்கள். அருகிலுள்ள கிருஷி விஞ்ஞான் கேந்திரம் (KVK) அல்லது பெங்களூரில் உள்ள ICAR-NBAIR நிறுவனத்தை அணுகுங்கள். எந்த பூச்சிக்கும் இயற்கையான தீர்வு உண்டு! ‘ என்று அழைப்புவிடுத்தார்— முனைவர் எஸ்.என். சுசீல். விழாவின் ஒரு பகுதியாக இந்தச் சேவையை ஆற்றிய Tamil Farming TV யூட்யூப் சேனலுக்கும் அதன் நிறுவனர் பொன் செந்தில்குமாருக்கும்சிறந்த தொழில்நுட்ப பரிமாற்று விருது‘ (Best Technology Transfer Award) வழங்கப்பட்டது. காவிரி ஆறு பிறக்கும் பசுமை பரவிய குடகுமலையில், ஒரு சிறப்பான நிகழ்வு ஏப்ரல்17, 2026 அன்று நடைபெற்றது. கர்நாடகமாநிலம், குடகு மாவட்டம் சேட்டல்லியில் உள்ள மத்திய தோட்டக்கலை பரிசோதனை நிலையம்(Central Horticultural Experiment Station-CHES), இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, 1947-ம்ஆண்டு குடகு மாநில அரசால் ஆரஞ்சு ஆராய்ச்சி மையமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1 பிப்ரவரி 1972-ல் ICAR-IIHRக்கு மாற்றப்பட்ட இந்த நிலையம், இன்று 80-ம் ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடியது. iihr expo கண்காட்சியை பார்வையிடும்.முனைவர் துசார் கந்தி பேஹேரா, இயக்குநர், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்… அறிவியல் அடிப்படையிலான ஊட்டச்சத்து மற்றும் இதர இடுபொருள் மேலாண்மையைப் பின்பற்றுவதற்கான தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரமும்(Intensive Awareness Campaign for Adoption of Science Based Nutrient and Other Input Management) இதே தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மாற்றக்கூடிய வல்லமை கொண்டவை. IIHR முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர்(விரிவாக்கம்) முனைவர் இர. செந்தில்குமார் நிகழ்ச்சிகள் குறித்து விரிவாக விளக்கினார்.
Dr senthil kumar

முனைவர் இர.செந்தில் குமார்

80 ஆண்டுகளின் பங்களிப்பு — உயர் மதிப்பு பழங்கள் ‘’குடகு தட்பவெப்ப நிலை தனித்துவமானது. இங்கு வளரும் பழங்கள் அதிக சந்தை மதிப்பு கொண்டவை. அவகாடோ, ரம்புட்டான், ஆஃப்சீசன்லிச்சி, மங்குஸ்டீன், பேஷன்ஃப்ரூட் என பல உயர் ரக பழங்கள் இங்கு வெற்றிகரமாக பயிரிடப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு குறைந்தது மூன்றுலட்சம் ரூபாய்வரை நிகரலாபம்கி டைக்கும் இந்த பழங்கள், இதுவரை இறக்குமதியை நம்பியிருந்த இந்தியாவிற்கு இப்போது உள்நாட்டிலேயே கிடைக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஓர் ஆண்டு மட்டும் இந்த நிலையம் அவகாடா பழக்கன்றுகளை ஒரு கோடி ரூபாய்க்கு விற்று சாதனைப்படைத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளால் 300 ஏக்கரில் அவகாடா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் என்றால், 300 ஏக்கரில் சுமார்1 0 கோடி ரூபாய்அதுவும் வரும் 30 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கிடைக்கும் வருமானம். நான் கண்டுபிடித்த Arka Supreme (வெளியீடு: 2020) மற்றும்Arka Coorg Ravi (வெளியீடு: 2022) புதிய பயிர் ரகங்கள் இந்த நிலையம் மூலமே வெளியிடப்பட்டுள்ளன. காவேரி என்ற பேஷன் ஃப்ரூட் ரகம் 1980-களிலேயே இங்கிருந்து வெளியிடப்பட்டது. இன்று இயற்கை பழச்சாறுகளுக்கான தேவை   அதிகரித்திருப்பதால் அந்த ரகத்தின் மதிப்பும் மிகவும் உயர்ந்துள்ளது. டிராகன் ஃப்ரூட் முதன் முதலில்இந்த மண்ணில் சோதிக்கப்பட்டதும் இங்கேதான். இன்று அதன் உற்பத்தி நாடு முழுவதும் பரவி இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது. இயற்கை எதிரிகளே போதும் — பூச்சிக்கொல்லி வேண்டாம்
ICAR-NBAIR

ICAR-NBAIR இயக்குநர் முனைவர் எஸ்.என். சுசீல்

விழாவில் ICAR-NBAIR இயக்குநர் முனைவர்எஸ்.என். சுசீல் தன் உரையில் நியூட்டனின் விதியை விவசாயத்திற்கு அழகாக பொருத்திக்காட்டினார்: ‘ஒவ்வொரு சக்திக்கும் எதிர்ச்சக்தி இருக்கிறது. வயலில் பூச்சிதாக்குகிறது என்றால் அது ஓர் எச்சரிக்கை சமிக்ஞை மட்டுமே. செடி பலவீனமாக இருப்பதும், அதில் பூச்சிக்கு உணவு இருப்பதும் தான் காரணகாரியங்கள். இந்த வேரை தீர்க்காமல் மேலும்,மேலும் பூச்சிக்கொல்லி தெளிப்பது, செடியை இன்னும் பலவீனப்படுத்தும்.                                     இயற்கையிலேயே ஒவ்வொரு பூச்சிக்கும் அதை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணி அல்லது இயற்கை எதிரி இருக்கிறது. மியூலிபக் (மாவுப்பூச்சி) என்ற பூச்சியை கட்டுப்படுத்த 3,200 கோடி ரூபாய் வேதி மருந்துகளுக்கு செலவிடவேண்டிய நிலையில், வெறும் ஒருஒ ட்டுண்ணியை வெளியிட்டு அந்த நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளனர் எங்கள் விஞ்ஞானிகள்’ என்றவர், ‘பூச்சி பிரச்சனை வந்தால் நேரடியாக பூச்சிக்கொல்லி கடைக்கு செல்லாதீர்கள். அருகிலுள்ள கிருஷி விஞ்ஞான் கேந்திரம்(KVK) அல்லது பெங்களூரில்உள்ள ICAR-NBAIR நிறுவனத்தை அணுகுங்கள். எந்த பூச்சிக்கும் இயற்கையான தீர்வு உண்டு! ‘ என்று அழைப்புவிடுத்தார்— முனைவர்எஸ்.என். சுசீல்.
பால் உற்பத்தியை பெருக்கும் கர்நாடகா… பாடம் கற்றுக்கொள்ளுமா தமிழ்நாடு ? Think Different
IIHR இயக்குநரின் உரை — நெஞ்சைத் தொட்ட வார்த்தைகள் ICAR-IIHR இயக்குநர் முனைவர் துசார் கந்தி பேஹேரா தன் தலைமை உரையில் உணர்வுபூர்வமாக கூறினார்: ‘இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு வரும் போது உற்சாகமாக இருக்கிறது. என்னுடைய விஞ்ஞானிகளிடம் சொல்வேன்வேலை செய்யவேண்டும்எ ன்றால் பெங்களூரில் உள்ள IIHR-ல் இருங்கள். ஆனால், உண்மையாகவே விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால், சேட்டல்லியில் உள்ள CHES-ல் பணியாற்றுங்கள் என்று சொல்வேன். அந்த அளவுக்கு இந்த தோட்டக்கலை பரிசோதனை நிலையம் முக்கியமானது‘ என்றார். தொழில்நுட்பம் விவசாயி வரை — Tamil Farming TV விருது   இது வரை ஆராய்ச்சி நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு சேரவில்லை என்பது நீண்டகால குறைபாடு. மூன்றுமாதங்கள், 150 விஞ்ஞானிகள் உழைத்து நடத்திய கண்காட்சிகளில் கூட, தொலைவில் இருக்கும் விவசாயிகளுக்கு எட்டவில்லை. இந்த இடைவெளியை கடந்த மார்ச்17-ம் தேதி, பெங்களூருவில் நடைபெற்ற அர்க்கா வர்ச்சுவல் ஹார்டிகல்ச்சர் ஃபேர்-2026′ (Arka Virtual Horticulture Fair 2026) என்ற டிஜிட்டல் முன்முயற்சி தகர்த்தது. விஞ்ஞானிகளிடமிருந்து நேரடியாக பதிவுசெய்யப்பட்ட 25 தொழில்நுட்ப காணொளிகள் தமிழிலேயே வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் தொடர்பு கொண்டனர். 5 சென்ட் நிலமுள்ள சிறு விவசாயியிலிருந்து  500 ஏக்கர் வைத்திருக்கும்  பெரு விவசாயி வரைஎல்லோரும் பயன்பெற்று வருகின்றனர்.
Tamil Farming TV

Tamil Farming TV பொன் செந்தில் குமார் விருது பெறுகிறார்…

இந்தச்சேவையைஆற்றிய Tamil Farming TV யூட்யூப்சேனலுக்கும் அதன் நிறுவனர் பொன் செந்தில்குமாருக்கும்சிறந்ததொழில்நுட்பபரிமாற்றுவிருது‘ (Best Technology Transfer Award) வழங்கப்பட்டது. ‘குடகில் உருவாகும் காவிரி ஆறுவளம் சேர்ப்பது போல், Tamil Farming TV            தொழில் நுட்ப வழிகாட்டலை தமிழ்நாடு உழவர் பெருமக்களிடம் கொண்டு சென்று வளம் சேர்க்கிறது. ஆகையால், அந்த அறப்பணி மென் மேலும் வளர வேண்டும் என்று பாராட்டி விருது வழங்கினோம். கத்தியை கூர்மைப்படுத்தி வெட்டினால் வேலை விரைவில் முடியும்‘ — இந்த உவமை விவசாயத்திற்கும் பொருந்துகிறது. தொழில்நுட்பம் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குவதே, அதிக உழைப்பை விட அதிக பலன் தரும். உயர் மதிப்பு பழம் பயிரிடுங்கள். கழிவை உரமாக்குங்கள். பூச்சிக்கொல்லி விலக்குங்கள். தொழில்நுட்பம் தேடுங்கள். இந்த நான்கு தூண்களில் நின்றால், இந்திய விவசாயம் மீண்டும் செழிக்கும்விவசாயியும் ஆரோக்கியமான தேசமும் உருவாகும்’’என்று முனைவர் இர. செந்தில்குமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
natural farming inputs

விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருள் வழங்குதல்…

முன்னதாக சிறப்பு விருந்தினர்கள், முனைவர் துசார் கந்தி பேஹேரா, இயக்குநர், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,ICAR-NBAIR இயக்குநர் முனைவர் எஸ்.என். சுசீல், முனைவர் புத்ரா, இயக்குநர், வேளாண்மை துறை, கர்நாடகா அரசு,முனைவர். அர்தபந்து சாஹு இயக்குனர், ICAR-NIANP, பெங்களூரு உள்ளிட்டவர்கள் இயற்கை இடுபொருள் மற்றும் தோட்டக்கலை பயிர் ரகங்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து விழா உரை ஆற்றினார்கள். மேலும்,சிறப்பாகச் செயல்பட்ட அலுவலர்கள், விவசாயிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் மற்றும் இயற்கை இடுபொருள்களும் வழங்கப்பட்டன.
Please follow and like us:
error2
fb-share-icon20
Tweet 20
fb-share-icon20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS20
Follow by Email2
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube