வாழ்த்துகள் முதலமைச்சர் விஜய் அவர்களே!
Thank you for reading this post, don't forget to subscribe!மே 10, 2026 — தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. தமிழக மக்களின் நம்பிக்கையை தோளில் சுமந்து முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய் அவர்கள், முதல் கையெழுத்தாக 200 யூனிட் மின்சாரம் 2 மாதங்களுக்கு இலவசம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு படை அமைத்தல், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோப்புகளிலும் கையெழுத்திட்டார் — இது மிகவும் வரவேற்கத்தக்கது.
விவசாயம் காத்திருக்க முடியாது!
இந்தியாவின் முதல் பிரதமரும் உங்கள் நண்பர் ராகுல் காந்தியின் முப்பாட்டனார் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒரு முறை கூறினார்:
“வேளாண்மையைத் தவிர, மற்ற அனைத்தும் காத்திருக்கலாம்.” (Everything else can wait, but not agriculture.)
அந்த வார்த்தைகள் இன்றும் எவ்வளவு பொருத்தமாக உள்ளன! ஆகையால், சிஎம் விஜய் அவர்களே — தேர்தலில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம்.
தவெக அளித்த விவசாய வாக்குறுதிகள் — இனி நடைமுறை வர வேண்டியவை:

🌾 பயிர் கடன் தள்ளுபடி 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளின் வேளாண் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகளின் பயிர் கடனில் 50% தள்ளுபடி குறித்து பரிசீலிக்கப்படும்.
💰 குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,500 உறுதிப்படுத்தப்படும்.
📅 ஆண்டு முதலீட்டு உதவி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 நேரடியாக வழங்கப்படும்.
🎓 கல்வி உதவி 2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாய குடும்பங்களின் பிள்ளைகளின் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புச் செலவை அரசே ஏற்கும்.
☀️ சூரியசக்தி பம்புகள் 5 லட்சம் Solar பம்ப் செட்டுகள் விவசாயிகளுக்கு நிறுவப்படும் — விவசாயத்தை நவீனப்படுத்தும் இந்தத் திட்டம் மின் செலவை வெகுவாகக் குறைக்கும்.
தமிழ்நேச்சரின் வேண்டுகோள்:
முதல் கையெழுத்தே விவசாயம் சார்ந்து இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் — ஆனால் பரவாயில்லை! இனியாவது, மண்ணோடு மல்லடிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையில் வெளிச்சம் பாய வேண்டும். தந்த வாக்கை காப்பாற்றுங்கள், கொடுத்த நம்பிக்கையை நிலைநாட்டுங்கள்.
தமிழ்நாட்டின் விவசாயத்தையும் விவசாயிகளையும் விறுநடை போட வையுங்கள், சிஎம் விஜய் சார்! 🌱
#CMVijay#TamilNaduFarmers#விஜய்முதலமைச்சர்#விவசாயிகள்#TamilNature#தமிழ்நேச்சர்#KadanThallupadi#MSP2026#SolarPump#தமிழ்நாடுவேளாண்மை












Leave a Reply