இரவும் பகலும் இளைப்பாறாமல் உழைக்கும் விவசாயிகள், இரவு நேரத்தில் வயல் வெளிகளில் பணிசெய்யும்போது ஊர்வன (பாம்பு), காட்டுப்பன்றி, நாய் போன்ற உயிரினங்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் பாம்புகளின் நடமாட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.
Thank you for reading this post, don't forget to subscribe!இந்தியாவில் பாம்பு கடியால் ஒவ்வொரு ஆண்டும் சுமாரக 46,000 பேர் உயிரிழக்கின்றனர். மேலும் 1.4 முதல் 2.8 மில்லியன் வரையிலான உயிலழப்பு அல்லாத சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்திய விஞ்ஞானிகள் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக ‘கிசான் மித்ரா (KISAN MITRA CHHADI)’ என்ற கைத்தடி கருவியை உருவாக்கி உள்ளனர்.
இந்தியாவில் எத்தனை வகை பாம்புகள்?
இந்தியாவில் சுமாரக 350 வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் 10% மட்டுமே விஷமுள்ளவை — நல்ல பாம்பு (Cobra), கட்டு வீரியன் (Krait), கண்ணாடி வீரியன் (Russell’s Viper), சுருட்டை வீரியன் (Saw-scaled Viper). இதனால்தான் பாம்பைக் கண்டால் பொதுவாக படையும் நடுங்கும் என்பார்கள்.
கிசான் மித்ரா தடி எப்படி செயல்படுகிறது?
பார்ப்பதற்கு ஒரு சாதாரண ஊன்று கோல் போலவே தோன்றும் இந்த கருவி, 100 மீட்டர் தூரம் வரை பாம்புகள் மற்றும் அச்சமூட்டும் விலங்குகளை அடையாளம் காண வல்லது.
🔬 தொழில்நுட்ப அம்சங்கள்
பாம்பை நெருங்கும்போது உடனடி அதிர்வு எச்சரிக்கை — கையில் உணர்வு மூலம் தெரியும்
உள்ளிட்ட சென்சார் 100 மீட்டர் வரை துல்லியமாக விலங்குகளை கண்டறியும்
இரவில் தரையில் ஊன்றி வைத்து பொத்தானை அழுத்தினால் போதும் — டார்ச் லைட் போல
மூன்று மணி நேர மின்சாரத்தில் நீர்ப்பாசனம் செய்யும்போது வயல் வரப்பில் நடக்க பயன்படும்
பாம்பு கடித்தால் — செய்ய வேண்டியவை
Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/














மறுமொழி இடவும்