Tamil Nature

தமிழின் முதல் இயற்கை தளம் — மண்ணுக்கும் மக்களுக்கும்

ICAR-IIHR ஒதுக்கப்பட்ட பழத்துக்கு புத்துயிர்; ‘பலே’ லாபம் தரும் இரண்டு புதிய ரகங்கள்!

ICAR-IIHR தலைமை இயக்குநர் முனைவர் எம்.எல். ஜாட் பெங்களூரு ஆராய்ச்சி நிலையத்தில் பலா மரம் மற்றும் மாம்பழ ரகங்களை ஆய்வு செய்கிறார் — நாவல் மற்றும் பப்ளிமாஸ் புதிய ரகங்கள் அறிமுகம் 2026

கசப்பை கொன்று இனிப்பை பிறப்பித்த பப்ளிமாஸ், லாபம் தரும் நாவல் — பெங்களூரு ICAR-IIHR ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தமிழக விவசாயிகளுக்கு இரண்டு பொன்னான செய்திகள்.

Thank you for reading this post, don't forget to subscribe!

கடந்த மே 5, 2026 அன்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ICAR-இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IIHR) ஒரு முக்கியமான நிகழ்வு அரங்கேறியது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) தலைமை இயக்குநர் முனைவர் எம்.எல். ஜாட், நிறுவனத்தின் நாற்றங்கால் பிரிவு, காளான் உற்பத்தி அலகு, ஆய்வகங்கள் என அனைத்தையும் நேரில் கண்டு ஆய்வு செய்தார்.

ICAR-IIHR இயக்குநர் முனைவர் துசார் கந்தி பெஹரா, 54 பயிர்களில் நடைபெறும் ஆராய்ச்சி முன்னேற்றங்களை விளக்கினார். ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் வெறும் ஆய்வகங்களில் தங்காமல், விவசாயிகளின் வாழ்வை மாற்றி வருகின்றன என்பதை புள்ளிவிவரங்களோடு எடுத்துரைத்தார்.

ICAR தலைமை  இயக்குநர் முனைவர் எம்.எல். ஜாட் ஆய்வு
ICAR தலைமை இயக்குநர் முனைவர் எம்.எல். ஜாட் ஆய்வு

இரண்டு புதிய ரகங்கள் — இரண்டு புதிய வாய்ப்புகள்

1. அர்கா ஜாமுன் பிரைட் — நாவல் பழத்தில் புரட்சி

நாவல் பழ சாகுபடியில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ‘அர்கா ஜாமுன் பிரைட்’ என்ற புதிய ரகம், தரம், மகசூல், சந்தை ஏற்புடைமை — மூன்றிலும் இந்த ரகம் முன்னிலையில் நிற்கிறது.

2. அர்கா சிவா — கசப்பற்ற பப்ளிமாஸ்

“இந்த பழம் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கசப்பை குறைத்து, அதை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” — இவ்வாறு கூறுகிறார் ‘அர்கா சிவா’ ரகத்தை உருவாக்கிய முனைவர் சங்கரன், பழப்பிரிவு தலைவர், ICAR-IIHR.

பப்ளிமாஸ் என்றாலே மக்கள் மனதில் ஒரே ஒரு படம்தான் தோன்றும் — கசப்பு, தடிமன் தோல், விதை நிறைந்தது. அந்த மூன்று குறைபாடுகளையும் விஞ்ஞான முறையில் களைந்தது தான் இந்த புதிய ரகத்தின் சாதனை.

பொதுவான பப்ளிமாஸ் ரகங்களின் TSS அளவு 10-க்கும் கீழே இருக்கும். அர்கா சிவாவில் அது 12 டிகிரி பிரிக்ஸ். சாத்துக்குடி போல் இனிக்கும், ஆரஞ்சு போல் தோல் உரிக்கலாம்.

IIHR விஞ்ஞானி முனைவர் சங்கரன்
IIHR விஞ்ஞானி முனைவர் சங்கரன்

15 மருத்துவ குணங்கள் — ஒரு பழத்தில்

பப்ளிமாஸ் வெறும் பழம் மட்டுமல்ல — சுமார் 15 மருத்துவ குணாம்சங்கள் கொண்ட ஒரு அரிய உணவு. தாய்லாந்து, வியட்னாம், இந்தோனேசியா, சீனா என தெற்கு-கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த பழம் விலைமதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு ஒரு பழம் 1.50 முதல் 2 அமெரிக்க டாலர் வரை விற்கப்படுகிறது; இந்தியாவிலோ இன்னும் இந்த சந்தை விரிவடையவில்லை என்பது ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும்.

அர்கா சிவா — சாகுபடி சுருக்கம்

கன்று நட்டதில் இருந்து 4ஆம் ஆண்டே பழம் கிடைக்கும்

ஒரு செடியில் ஆண்டுக்கு 80–100 பழங்கள்; ஒவ்வொன்றும் 1.8 கிலோ வரை

ஹெக்டருக்கு 400 செடிகள் (5×5 மீட்டர் இடைவெளி)

வாரம் இரண்டு முறை நீர்ப்பாசனம்; மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஊட்டச்சத்து

தற்போதைய விலை ₹50–75 / பழம்; எதிர்காலத்தில் ₹150–200 எதிர்பார்ப்பு

கன்று : ICAR-IIHR-இல் கிடைக்கும்

ICAR-IIHR கள ஆய்வு மற்றும் புதிய பழ ரகங்கள் அறிமுகம்… காணொளி

விவசாயிகளுக்கு முனைவர் சங்கரனின் அறிவுரை

”பெரிய அளவில் உடனே இறங்கிவிட வேண்டாம். முதலில் 10 அல்லது 15 கன்றுகள் வாங்கி நடுங்கள். வீட்டில் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் சாப்பிட கொடுங்கள். நீங்களும் மனம் திருந்தினால், அடுத்த கட்டமாக ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என்று படிப்படியாக விரிவுபடுத்துங்கள்” என்று அவர் தெளிவாக வழிகாட்டுகிறார். கன்று வாங்கும்போதே சாகுபடி ஆலோசனையும் வழங்கப்படும்; மேலும் தகவலுக்கு ICAR-IIHR விரிவாக்கத் துறையை தொடர்பு கொள்ளலாம்”என்கிறார் முனைவர் சங்கரன்.

முனைவர் எம்.எல். ஜாட்
உரையாற்றுகிறார் முனைவர் எம்.எல். ஜாட்

முனைவர் ஜாட்டின் முத்தான வார்த்தைகள்

“விவசாயம் தன்னிறைவு பெற்று வலுவாக இல்லாவிட்டால், நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை. வேளாண்மையே தன்னிறைவான இந்தியாவை கட்டியெழுப்பும் உறுதியான தூண்.” — முனைவர் எம்.எல். ஜாட், தலைமை இயக்குநர், ICAR

”இனி தனிப்பயிர் சார்ந்த ஆராய்ச்சி மட்டும் போதாது. விதை தேர்வில் தொடங்கி சந்தை விற்பனை வரை — முழு உணவு உற்பத்தி சங்கிலியையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் . உயிரியல் ஆராய்ச்சியோடு சமூக விஞ்ஞானத்தையும் (Social Science) இணைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கும் சந்தைக்கும் உண்மையான பயன் கிட்டும்” என்று முனைவர் ஜாட் தெளிவுபடுத்தினார்.

ICAR-IIHR — தோட்டக்கலையின் புனித தளம்

பெங்களூரு ஹேசரகட்டா ஏரியோரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம் தொடக்கத்திலிருந்து 335 ரகங்களும் 154 தொழில்நுட்பங்களும் உருவாக்கியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 59 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன; 1,700-க்கும் மேற்பட்ட வணிக உரிமங்கள் வழங்கப்பட்டு, நாடு முழுவதும் தோட்டக்கலை தொழில்முனைவோர் உருவாக வழிவகை செய்துள்ளது. “இந்தியாவில் தோட்டக்கலை பயிர் செய்யும் ஒவ்வொரு விவசாயியும் வாழ்வில் ஒரு முறையாவது இந்த இடத்துக்கு வந்து பார்க்க வேண்டும்” என்று  Tamil Farming TV யூட்யூப் சேனல் நிறுவனர்,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் Professor of Practice, பொன் செந்த்தில் குமார், அழைப்பு விடுக்கின்றனர்.

2 “ICAR-IIHR ஒதுக்கப்பட்ட பழத்துக்கு புத்துயிர்; ‘பலே’ லாபம் தரும் இரண்டு புதிய ரகங்கள்!”க்கு பதில்கள்”

  1. Prakash அவதார்
    Prakash

    Kindly give support to out side bangalore for testing the new plant and trees to grow

  2. Ponnu Raman M அவதார்
    Ponnu Raman M

    நான்இயற்கை விவசாயம் சார்ந்த விபரங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Please follow and like us:
error3
fb-share-icon20
Tweet 20

🌿 இயற்கை செய்திகள் உங்கள் inbox-ல் பெறுங்கள்!

தமிழ்நேச்சர் புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுங்கள்

பொன் செந்தில்குமார், நிறுவனர், ஆசிரியர்

Professor | Journalist | Writer | Orator | Reader | Researcher
Founder & Editor – Tamil Nature , Professor of Practice – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பசுமை விகடன் இதழின் மேனாள் இதழாசிரியர்.
கூடுதல் தகவல்கள்: https://tamilnature.com/author/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

RSS20
Follow by Email3
Facebook20
Facebook
X (Twitter)20
YouTube20
YouTube