IPM தொழில்நுட்பத்தில் அசத்தல் லாபம்… 3மாதம்; 2 லட்சம் லாபம்…அர்கா பிரசன் பீர்க்கங்காய் சாகுபடியில் IPM தொழில்நுட்பம் மூலம் நல்ல லாபம் எடுக்க முடியும்.
கர்நாடகா மாநிலம் ,பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் (ICAR-Indian Institute of Horticultural Research ) பயிர் நோயியல் துறை பேராசிரியர் முனைவர் மகேஷா, நூற்புழுவியல் துறையின் முதன்மை விஞ்ஞானி முனைவர் உமா மகேஸ்வரி… அளித்துள்ள காணொளி பேட்டி; இதில் Integrated Pest Management மூலம் இயற்கை முறையில் பீர்க்கன் காய் சாகுபடியில், வரப்பு பயிர் மூலம் வைரஸ் நோய் கட்டுப்படுத்தி, கூடுதல் லாபம் கொடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
“IPM” என்பது முதன்மையாக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையைக் குறிக்கிறது. இது மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக, உயிரியல், பண்பாட்டு, இயற்பியல் மற்றும் இரசாயனக் கருவிகளைப் பயன்படுத்தி பூச்சிகளை நிர்வகிப்பதற்கான ஒரு நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையாகும். இது விவசாயம், வீடுகள் மற்றும் பணியிடங்களில் பூச்சிகளைக் குறைந்த செலவில் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது; இரசாயன பூச்சிக்கொல்லிகள் வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.












Leave a Reply